இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதியில், யானைகள் சரணாலயம் அமைப்பதற்கான ஜி.பி.எஸ். சர்வை நடத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதியில், காட்டு யானைகள் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வனத்துறை சார்பாக யானைகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. குடிநீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் யானைகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, யானைகள் சரணாலயம் அமைக்க வனத்துறை அதிகாரிகள் முன்வந்தனர். இதையடுத்து, சரணாலயம் அமைப்பதற்கான ஜி.பி.எஸ். சர்வை நடத்தப்பட்டுள்ளது. 600 ஹெக்டேர் பரப்பளவில் சரணாலயம் அமைக்கப்பட உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post