சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை வாக்கு சேகரிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் 2 மணி நேரம் கூடுதல் நேரம் ஒதுக்குவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓயும் நிலையில் ஏப்ரல் 4 ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.தபால் ஓட்டுக்காக காவலர்களுக்கு திமுக வேட்பாளர் கே.என்.நேரு பணம் கொடுத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பெண்கள் குறித்த திண்டுக்கல் லியோனியின் ஆபாச பேச்சு தொடர்பாக அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக சத்யபிரதா சாகு கூறினார்.
Discussion about this post