கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ல் அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்று முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் குறிப்பாக அதிமுகவிற்கு என்று ஒரு பொதுச்செயலாளர் வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு துரோகிகளின் கயமைகளைக் கடந்து அன்றைய ஒன்றரைக் கோடித் தொண்டர்படையின் விருப்பத்திற்கு இணங்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக ஆனார். அதனைத் தொடர்ந்து அதிமுகவிற்கு என்று புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்து இருந்த நிலையில், தற்போது கழக பொதுச்செயலாளர் நியமித்திருந்த 79 கழக அமைப்பு செயலாளர்களையும், 69 மாவட்ட கழக செயலாளர்களையும் 10 பிற மாநிலச் செயலாளர்களையும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.
அதிமுக வின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்குழு செயற்குழுவில் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்திருந்த நிலையில் தனது இணையப் பக்கத்திலும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி என பதிவேற்றம் செய்திருந்தது. தற்போது கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்ட 69 மாவட்ட கழக செயலாளர்கள், 79 கழக அமைப்புச் செயலாளர்கள், புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, மகாராஸ்ட்ரம், கேரளம், புதுடெல்லி, அந்தாமான் ஆகிய பிற மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட மாநில கழக செயலாளர்களையும் அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.