இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொது குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் செல்லும் என வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் நடைபெற்ற பொது குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால் இந்திய தேர்தல் ஆணையம் அதனை அங்கீகரித்து தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவானது சில முக்கியத் தீர்மானங்களை எடுத்தது. அதில் ஒற்றைத் தலைமை என்கிற கோரிக்கை தொண்டர்களால் எழுப்பப்பட்டது. மேலும் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் கட்யிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இதைத் தவிர பொதுச்செயலாளர் என்கிற பதவி மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் அப்பதவிக்கு உரியவரை அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இது மாதிரியான பல தீர்மானங்கள் அன்றைக்குப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.