திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏகாதசி, துவாதசி தரிசனத்திற்கு இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18-ம் தேதி வைகுண்ட ஏகாதசி, 19-ம் தேதி துவாதசி ஆகிய 2 நாட்களும் பரமபத வாயில் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதற்காக அன்னப்பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நான்கு மாட வீதியில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் அமரும் விதமாக நிழற்பந்தல், குடிநீர், கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் ஏகாதசி, துவாதசி தரிசனத்திற்கு இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 18-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் பரமபத வாயில் வழியாக தரிசனத்தில் அனுமதிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post