பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம், 300 மீட்டர் உயரமும், பத்தாயிரம் டன் எடையும் கொண்டதாகும். இதனைக் காண உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இந்தநிலையில், 2-ம் தளத்தில் இருந்து திடீரென மேலே ஏறிய மர்ம நபர், கோபுரத்தின் உச்சிக்கு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் குவிந்து, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்தினர். அப்பகுதியின் சில சாலைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.