எகிப்தில் புதிதாக ஒரு இசுபிங்சு கண்டுபிடிப்பு…! இசுபிங்சு அப்படியென்றால் என்ன?..வாங்க பார்க்கலாம்!

இசுபிங்சு :

இசுபிங்சு என்பதனை ஆங்கிலத்தில் SPHINX என்று சொல்வார்கள். இவற்றை நாம் எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்றால்,  தமிழக கட்டிடக் கலையில் அனைவரும் அறிந்த யாளி மிருகத்தினை மனதில் கொள்ளலாம். தமிழகத்தில் எப்படி யாளி மிருகமோ அதுபோல எகிப்தில் இசுபிங்சு. இந்த இசுபிங்சு மூன்று வகையில் உள்ளன. அவை,

1. அண்ட்ரோ இசுபிங்சுகள்: இவை சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்டவை.

2. கிரியோ இசுபிங்சு: சிங்க உடலும் செம்மறியாட்டுத் தலையும் கொண்டு அமைந்தவை.

3. ஹையெரொகோ இசுபிங்சு: சிங்க உடலும் வல்லூறு அல்லது பருந்தின் தலையும் கொண்டவை.

தற்போது தொல்லியலாளர்கள் எகிப்தில் உள்ள டெண்டரா கோவிலில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இசுபிங்சு ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலை அண்ட்ரோ இசுபிங்சு வகையினைச் சேர்ந்தது ஆகும். சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்டவை. மேலும் இந்த சிலை எந்தவித சிதைவுக்கும் உட்படவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த சிலையின் முகமானது சிறிய அளவிற்கான புன்னகையுடன் காணப்படுகிறது. மேலும் இதன் உதடுகளுக்கு அருகில் சிறிய சிறிய பள்ளங்கள் உள்ளன. இந்த சிலையானது ரோமப் பேரரசர் க்ளாசிடஸ் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Exit mobile version