ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்றார் முதல்வர் பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமலை சென்றார்.

ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தாருடன் கார் மூலம் திருமலைக்கு வந்தடைந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.

திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ள முதலமைச்சர், இன்றிரவு வராக சாமி, ஹயக்ரீவர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். நாளை காலை ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு நடைபெறும், அஸ்டதள பாத பத்ம ஆராதன சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

Exit mobile version