மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை, மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவானது என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள கண்டனச் செய்தியில், அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி, நீட் தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை, திமுக அரசு, மரணக் குழியில் தள்ளியிருப்பதாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்திருந்தால், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மாணவச் செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக் கூடாது என வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post