எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அதற்கான ஆவணங்களை அதிமுக இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அதிமுக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மின்னஞ்சல் மூலமாகவும் தபால் மூலமாகவும் அளித்துள்ளது. அதேபோல் தமிழக தேர்தல் ஆணையத்திடமும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை அளித்துள்ளது. மேலும் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை முறைப்படி கடந்த 28ஆம் தேதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version