முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
இன்று காலை 9 மணிக்கு புவனகிரியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்தும்,
காலை 9.45 மணிக்கு குறிஞ்சிப்பாடியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்தும்,
காலை 10.45 மணிக்கு கடலூரில் அதிமுக வேட்பாளரும் தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்தை ஆதரித்தும் முதலமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
காலை 11.45 மணிக்கு பண்ருட்டியில் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்தும்,
நண்பகல் 12.30 மணிக்கு நெய்வேலி பாமக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து இந்திரா நகரிலும்,
மாலை 3 மணிக்கு விருத்தாசலத்தில் பாமக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்தும் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு அரியலூரில் அதிமுக வேட்பாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனை ஆதரித்தும்,
மாலை 6 மணிக்கு குன்னத்தில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்தும்,
இரவு 7 மணிக்கு பெரம்பலூரில் அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்செல்வனை ஆதரித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
Discussion about this post