தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் மிக முக்கிய விருந்தினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது என்பது தொன்றுதொட்டு விமான நிலைய ஆணையமானது செய்து வருகிறது. இதில் Z ப்ளஸ் பாதுகாப்பு இருப்பவர்கள் இந்திய விமானத்துறை ஆணையத்திடம் சிறப்பு அனுமதியை பெற்று, விமானங்களை பயன்படுத்தும் பொழுது நேரடியாக விமானம் அருகே வந்து விமானத்தில் ஏறி பயணம் செய்யும் வகையில் சிறப்பு அனுமதியை பெறலாம். அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில், தற்போது விமான போக்குவரத்தை பயன்படுத்தும் பொழுது நேரடியாக விமானம் அருகே வரை காரில் சென்று அங்கிருந்து விமானத்தில் பயணிக்கவும், அதேபோன்று விமானத்தில் பயணித்த பிறகு விமான நிற்கும் இடம் வரை காரில் சென்று சிறப்பு நுழைவாயில் வழியாக வெளியேறும் வகையில் சிறப்பு அனுமதியை இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.