தன்னை டெல்டாக்காரர் என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின்தான் மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவந்தார் – எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தற்போது தலைமைச் செயலகம் வெளியே செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் :

மத்திய அரசாங்கம் 101 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க இந்தியா முழுவதும் அமைக்க  திட்டம் வகுத்து தமிழகத்தில் மூன்று இடங்களைத் தேர்வு செய்துள்ளது.  ஏற்கனவே நெய்வேலி என்எல்சியினால் 105 கிராமங்கள் நிலக்கரி எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை இருக்கிறது. பொன் விளையக்கூடிய பூமி அழியக்கூடிய சூழ்நிலை. இந்நிலையில் புதிதாக 3 இடங்களில்  தஞ்சாவூர் உரத்தநாடு அருகே உள்ள வடசேரி, கடலூர் சேத்தியாதோப்பு, அரியலூர்  மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் தொழிற்சாலை கொண்டுவரக்கூடாது என்பது வேளாண் சட்டத்தின் முக்கிய அம்சம்.  ஆனால் மத்திய அரசாங்கம் இங்கு தொழிற்சாலை அமைக்க திட்டம் இட்டிருப்பது விவசாயிகளிடம் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடியா திமுக அரசு முன்கூட்டியே நடவடிக்கையை எடுத்திருக்கலாம்.  2006 முதல் 2011 ல் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் திமுக ஆட்சியில் போடப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களினால்தான் தமிழகத்தில் இதுபோன்ற திட்டங்கள் மத்திய அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.  இது மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்ட பிரச்சினை. ஆகவே கடிதம் மட்டுமே எழுதினால் போதாது. நான் முதலமைச்சராக இருக்கும்போது இப்போது இருக்கும் முதல்வர் கடிதம் மட்டுமே எழுதுகிறார் என்று என்மீது விமர்சனம் வைத்தார். ஆனால் இவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்.

திமுகவினரும் அவர்களின் கூட்டணியில் அங்க வகித்தவர்களும் சேர்த்து 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருக்கிறார்கள். இப்பிரச்சினைக் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப வேண்டும். அதிமுக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை வந்தது. அம்மாவின் அரசு அம்மா வழியில் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி மேலாண்மை அமைக்க காரணமாக அமைந்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கிக்கொண்டு இருக்காமல், முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். இத்திட்டம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். தன்னை டெல்டாக்காரர் என்று சொல்லும் முதல்வர் மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தார். பொன்விளையும் பூமியை இவர் பாதுகாத்தால் மட்டும் போதும். பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் இதனை எதிர்க்கிறார்கள். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கேள்வி கூட எழுப்பாமல் இருக்கிறார்கள். உண்மைச் செய்திகளை ஊடகங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

 

Exit mobile version