புது டெல்லி :
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவினை மரியாதை நிமித்தமாக சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியது பின்வருமாறு உள்ளது.
அமித்ஷா அவர்களை இல்லத்தில் சந்தித்து பேசினோம். உடன் பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா அவர்கள் இருந்தார்கள். அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது. அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்தவிதமான கருத்துவேறுபாடு கிடையாது. விரிசல் உள்ளது என்பது போன்ற கருத்துக்களை ஊடக நண்பர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டுசெய்கின்றனர். ஒரு கூட்டணிக்குள் உள்ள கட்சிகள் அந்த அந்த கட்சிக்கு உள்ள கொள்கையின்படிதான் செயல்படுவார்கள். திமுகவின் கூட்டணிக் கட்சிகள்போல அடிமைகள் அல்ல எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள். மெலும் இப்போதுதான் பன்னிரெண்டு மணிநேரம் சட்டமசோதாவை எதிர்த்து அத்தி பூத்தாற்போல வெளிநடப்பு செய்துள்ளார்கள்.
பொதுக்குழுத் தீர்மானம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தீர்மானங்கள் செல்லும் என்று வெளியிட்டுவிட்டது. அதேபோல நீதிமன்றம் தெளிவாக வெளியிட்டுவிட்டது.
தமிழகத்தின் நிதியமைச்சர் பேசிய ஆடியோ செய்திகள் அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளன. 30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக சபரீசனையும் உதயநிதியும் சொல்கிறார். இரண்டாவது ஆடியோவும் வந்துள்ளது. அதைப் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவரது பேச்சினை ஆய்வு செய்து நடவடிக்கை மத்திய அரசு உரிய எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
டெண்டர் குறித்த கேள்வி எழுப்பும்போது, திமுக ஆட்சியில் 28273 கோடி செலவு செய்யவில்லை. ஆதி திராவிடர் வீட்டு வசதி 1498 கோடி, விவசாயத்துறை 1174, மக்கள் நலவாழ்வுத்துறை 1088 கோடி, வீட்டுவசதித்துறை 1338கோடி, வருவாய்த்துறை 1152கோடி, பள்ளிக்கல்வித்துறை 1058 கோடி, நெடுஞ்சாலை 2797 கோடி, நீர்வளத்துறை 1329 கோடி இதுபோன்று பலத் துறைகளில் செலவு செய்யவில்லை. டெண்டர் முறைகேடு என்றால் எந்தெந்த இடத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்ல வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.பாரதி அவராகவே வழக்கை வாபஸ் வாங்கினார்.
கொடநாடு வழக்கு குறித்து கேள்வியெழுப்பியபோது, அவ்வழக்குப் பற்றி சட்டமன்றத்தில் நான் பேசிய பேச்சினைப் பற்றி நான் பேசினால் அதை பத்திரிகைகள் போட மறுக்கிறார்கள். கொடநாடு வழக்கினை முதன்முதலில் கையில் எடுத்தது அதிமுக தான். பிறகு ஓராண்டு காலம் கொரோனா ஆட்சிகாலத்தில் கோர்ட் செயல்படவில்லை. அதற்கு பிறகு விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்றுவிட்டனர். அவர்களை அழைப்பதற்கு சில காலம் எடுத்தது. பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை வெளியில் கொண்டுவந்தது திமுகதான். திமுகவைச் சேர்ந்த வக்கீல் இளங்கோவன் ஜாமீன் பெற்றுத் தந்தார். தற்போது அந்த நபர் நீலகிரி செசன் கோர்ட்டில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக உள்ளார். இங்க உள்ள ஜாமீன் தாரருக்கும் கொடும் குற்றவாளிக்கும் உள்ள தொடர்பு என்ன. அதனால்தான் நாம் சிபிஐ விசாரணை வேண்டும். பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஏன் ஸ்டாலின் இன்னும் வாய் திறக்கவில்லை என்று கேள்வியெழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.