பொதுச்செயலாளருக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பிறந்தநாள் வாழ்த்து!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69வது பிறந்தநாளையொட்டி, கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சேலத்தில் உள்ள கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் இல்லத்திற்கு கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு காணும் பிறந்தநாளில் அவர் பல்லாண்டு சிறப்புடன் வாழ வேண்டும் எனவும், மாபெரும் இயக்கத்தை கட்டி காக்கும் அறப்பணியில் இருப்பவர் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் எனவும் எல்லா வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்தார்.

Exit mobile version