விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!

விழுப்புரத்தில் கஞ்சா போதை ஆசாமிகளால். வியாபாரி ஒருவர் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கவனயீர்ப்பு தீர்மானத்தினை முன்மொழிந்தார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி விழுப்புரத்தில் ஜிஆர்பி தெருவை சேர்ந்தவர்கள் ராஜசேகர் வல்லரசு என்ற இளைஞர்கள். இருவரும் கஞ்சா போதையில் நேரு வீதி பாகர்ஷா தெரு எம் ஜி ரோடு ஆகிய முக்கிய கடைவீதிகளில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திமுகவினர் இருவரும் கஞ்சா போதையில் வீதிகளில் உள்ள பல கடைகளை அடித்து நொறுக்கியுள்ளதோடு சாலையில் சென்றவர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். அப்போது விழுப்புரம் எம் ஜி சாலையில் உள்ள ஜோதி விருட்சம் கடையில் பஞ்சபோதையில் சென்ற இருவரும் கத்தியை காட்டி தலையில் உள்ளவர்களை மிரட்டியுள்ளனர்.

அப்போது அருகில் நின்ற விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த முகமது ராஜா என்ற முகமது இப்ராஹிம் ராஜா என்பவர் ஏன்  இந்த தகராறு  என்று தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த கஞ்சா போதை ஆசாமிகள் இப்ராஹிம் ராஜாவை கத்தியால் குத்தியுள்ளனர்.  அனைத்து ஊடகங்களையும் சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் வெளிவந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த இப்ராஹிம் ராஜாவை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இப்ராஹிம் ராஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தின் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளதால் தினந்தோறும் இது போன்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். கஞ்சா போன்ற போதை பொருட்கள் தமிழகத்தில் தடையில்லாமல் தொடக்கத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது இச்சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் மேற்கு காவல் நிலையத்தை நேற்று இரவு எட்டு மணிக்கு முற்றுகையிட்டனர். தொடர்ந்து நேற்றைய படுகொலை சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் நகரத்தில் வியாபாரிகள் என்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இப்ராஹிம் ராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தினைக் கொண்டுவந்தார்.

Exit mobile version