மும்பையில் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல்

வங்கிகளில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான மேலும் 147 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பஞ்சாப் நேசனல் வங்கியில் வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடனை பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இதனையடுத்து நீரவ் மோடியின் அசையும், அசையாச் சொத்துக்கள், ஆயிரத்து 700 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், 489 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள், வைரம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் நீரவ் மோடிக்கு சொந்தமான 8 கார்கள், கட்டிடங்கள், தொழிற்சாலை, இயந்திரங்கள் மற்றும் வைர நகைகளை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு 147 கோடி ரூபாயாகும். இந்த சொத்துக்கள் அனைத்தும், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version