ப.சிதம்பரத்திற்கு 11 நாடுகளில் சொத்துகள் உள்ளன: அமலாக்கத்துறை

ப.சிதம்பரத்திற்கு 11 நாடுகளில் சொத்துகள் இருப்பதாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே, அமலாக்கத்துறை துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மோனாக்கா, சிங்கப்பூர், தென்ஆப்ரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் ப.சிதம்பரத்திற்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version