மாட்டுனாரு அமைச்சரு! பொன்முடிக்கு ஆப்பு வைக்கும் அமலாக்கத்துறை!

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிஆர்பிஎஃப் காவலர்களின் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மட்டுமின்றி பொன்முடிக்குச் சொந்தமான பிற இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

மாட்டிக்கொண்ட பொன்முடி!

இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமனி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனையானது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2006 முதல் 2011 வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதமசிகா மணியின் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கெனவே அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்துக்கு காலை 7 மணிக்கு மத்திய துணை ராணுவப்படை உதவியுடன் அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக வந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக பல்வேறு குவாரிகளுக்கு அனுமதி அளித்து, அளவுக்கு அதிகமான செம்மண் அள்ளப்பட்டு விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லாரிகள் மூலம் முறைகேடாக செம்மண் அள்ளி விற்பனை செய்ததில் 28 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி கௌதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் சதானந்தன் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், உள்ளிட்ட ஏழு பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியோடு தலைமறைவானார். பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஜாமின் கோரினர். ஜாமீன் கிடைக்காததால் பொன்முடி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட மூன்று பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 28 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, அதன்மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணத்தின் மூலம் என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டன, எங்க முலீடு செய்யப்பட்டன என்பது குறித்து, சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு பதிவு செய்து, தற்போது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Exit mobile version