பழைய பேஷண்ட் செ.பாலாஜிய தூக்குங்க! புது பேஷண்ட் பொன்முடிய அட்மிட் பண்ணுங்க! அமலாக்கத்துறை அதிரடி!

கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. ஊரை அடித்து உலையில் போட்டவர் என்று சொல்வார்கள். அப்படி மக்கள் பணத்தை ஊழலில் சம்பாதிப்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் முன்வரிசையில் வந்து நிற்பார்கள் திமுக அமைச்சர்கள்.

aதிலும் சர்ச்சைக்கு நிகரான ஒரு பெயர் என்றால் அது நிச்சயம் பொன்முடி தான். எதற்கெடுத்தாலும் சர்ச்சை, பேச்சில் நாகரீகமற்ற தன்மை, பொதுமக்களை ஒரு பொருட்டாகக் கூட கருதாமல் கேவலமாக நடத்துவது என்று பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

மக்களின் ஆதரவோடு அரியணை ஏறுகின்ற அரசன், மக்களுக்கு என்ன வேண்டும், அவர்களின் தேவை என்ன என்று அறிந்து செயல்பட வேண்டும். அதனை சொல்லிக்காட்டி வாக்கு வாங்குவது கூட பரவாயில்லை. ஆனால் அதனை கேவலமான தொணியில் பேசுவதுதான் அபத்தமான ஒன்று. மகளிருக்காக இலவசப் பேருந்து திட்டத்தைத் தொடங்கிவிட்டு “ஓசி பஸ்” என்று அதனை ஏளனமாக பேசிவது திமுகவினருக்கு கைவந்த கலை.  இப்படி செய்தவர் வேறு யாரும் இல்லை அமைச்சர் பொன்முடிதான். பின்னர் தன் சொந்தக் கட்சி உறுப்பினரிடமே நீ ”எஸ்.சி” தானம்மா என்று கேட்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து மக்களிடம் மாட்டியிருக்கிறார்.

தற்போது இவர் மாட்டியிருப்பது அமலாக்கத்துறையிடம். 2006 முதல் 2011 வரை ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் ஊழலில் ஈடுபட்டு அரசுக்கு 28 கோடி வரையில் இழப்பீடு ஏற்படுத்தியிருக்கிறார். இதனையொட்டி கடந்த 2012 ஆம் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் வாய்தா மேல் வாய்தா வாங்கி தப்பி வந்தார் அமைச்சர் பொன்முடி. தற்போது அமலாக்கத்துறை அந்த வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பொன்முடிக்கு சம்பந்தமான 9 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. முக்கியமாக அவரது மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் கலைஞர் டிவி கார்த்திக் வீட்டிலும் சரமாரியாக சோதனை செய்து வருகின்றனர் அமலாக்கத்துறையினர். கிட்டத்தட்ட எட்டு மணி நேரங்கள் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டு நடந்து முடிவதற்குள் ஒரு பெரிய தலை சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கழக உடன்பிறப்புகளுக்கு இப்போதே வேர்த்துக்கொட்ட தொடங்கிவிட்டது. அடுத்தது நாமாக இருப்போமா என்று ஒவ்வொரு அமைச்சர்களும் பயம் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

 

Exit mobile version