வரி ஏய்ப்பு புகார்: கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு

தமிழகம் மற்றும் ஆந்திராவிலுள்ள கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 44 கோடி ரூபாய் பணம், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பினாமி சொத்துக்கள், வெளிநாட்டு முதலீடு, ஹவாலா பணபரிமாற்றம் போன்றவைகள் சோதனையின் போது கண்டறியப்பட்டது. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் காரணமாக கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Exit mobile version