மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலாகிறது.

பிரதமராக மோடி 2-வது முறையாக ஆட்சி அமைத்தபின், முதல் மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சார்பில், நாளை காலை 11 மணிக்கு 2019-20 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறார். இவருக்கு இது முதல் பட்ஜெட் ஆகும்.

ஏற்கனவே, 2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அப்போதைய தற்காலிக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, முதற்கட்டமாக பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் இன்று தாக்கல் செய்கிறார்.

Exit mobile version