கருத்து சொன்னா என்கவுண்டரா?..திமுகவின் அராஜகம்..உண்மையை உடைக்கும் சவுக்கு சங்கர்!

வாய்ஸ் ஆஃப் சவுக்கு எனும் டிவிட்டர் தளத்தின் அட்மின் பிரதீப் என்பவர் கடந்த செவ்வாய் 21/03/2023 அன்று நடு இரவு போலிசாரால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டார். அதற்கு காரணமாக முன்வைக்கப்பட்டது எதுவென்றால் அவர் பகிர்ந்த ஒரு வீடியோ மீம். அந்த மீமில் கவுண்டமணி, செந்தில் பாத்திரங்களின் முறையே ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜன் என்று சித்தரிக்கப்பட்டு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை விமர்சனம் செய்யுமாறு  அமைந்திருந்தது. இந்த மீமினைப் பகிர்ந்தமைக்காக பிரதீப் மீது போலிசார் வழக்குத் தொடுத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி அவர்கள் இந்த மீம் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று கூறி புகார் தெரிவித்துள்ளார். பிரதீப் மீது சிஆர் 52/2023 இபிகோ 153, 505 (1) (ஆ), 509 ஐடி சட்டம் போன்ற பிரிவின் கீழ் வழக்கானது பதியப்பட்டு உள்ளது.  அதாவது இரு தரப்பினரிடையே கலகத்தை உண்டு பண்ணுவது, பெண்களை இழிவுபடுத்துவது, சமூக ஊடகங்கள் மூலம் தவறான கருத்தினை மக்களுக்கு பரப்புவது போன்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்தின் மீதான அத்துமீறலாக பார்க்கப்படுகிறது. பிரதீப்பின் கைதினைத் தொடர்ந்து பலர் அதே மீமினை ஷேர் செய்து வருகிறார்கள். இதனையொட்டி நமது நியூஸ் ஜே இணைய ஊடகத்தில் பத்திரிகையாளர் திரு. சவுக்கு சங்கர் அவர்கள் பிரத்யேகப் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதன் இணைப்பினை கீழே இணைத்துள்ளோம்.
YouTube video player

Exit mobile version