டெல்லியில், ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டால், இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஸ்பெயின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்தியா தலைநகர் டெல்லியில் காற்று அதிகளவு மாசடைந்துள்ளது. காற்றின் மாசு கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரித்து தரக்குறியீடு 500க்கு மேல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், ஒற்றை, மற்றும் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. மேலும், அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் காய்ந்த பயிர்களை எரிப்பதாலும், டெல்லில் கழிவுகளை எரிப்பது மற்றும் கட்டுமான பணிகளாலும், காற்றும் மாசடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக சுகாதார பார்சிலோனா அமைப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், மூளை பாதிப்பு அல்லது இதய பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை யோத் மற்றும் உடல்பருமன் போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
Discussion about this post