நாமக்கல்லில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகளாக சேலம் மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் செவிலியர் ஒருவரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண் செவிலியர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எந்தெந்த மருத்துவமனைகளில், எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளாக சேலம் மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சாரதா, நாமக்கல்லை சேர்ந்த பிருந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.