உங்கள் கண்கள் அடிக்கடி வறண்டு போகிறதா…?
இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.
அப்போது கண்களில் மருந்துகளை விட்டுக் கொண்டால், அரிப்பு, எரிச்சல் போன்றவை இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை அதிகரித்துவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றன
கண்களை வறட்சியில் இருந்து எப்படி காப்பது:
மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்….
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ((Omega fatty acid)) அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று சொல்கின்றனர் மருத்துவர்கள்
ஃபேட்டி ஆசிட்கள் கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவுகிறது. கடல் உணவுகளான மீன்களில் சாலமன் மற்றும் ஆளி விதைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் கண்களில் வறட்சி தடுக்கப்படுவதோடு, வயிற்றில் ஏற்படும் உப்புசமும் சரியாகும்.
கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எரிச்சலை தடுக்க குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது நல்லது.
கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்களை ரிலாக்ஸ் செய்வதற்கு வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை கண்களில் வைப்பது, புத்துணர்ச்சி தரும்.
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்தால், கண்களுக்கு சிறிதுநேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். இடைவேளையின் போது கண்களுக்கு உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.
கண்களில் பிரச்சனை வராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது, கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும்.
கண் வறட்சி ஏற்பட்டால் என்ன விபரீதம் ஏற்படும்?….
கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமைகளின் உராய்வை தடுக்கிறது. போதிய நீர் இல்லாததால் உண்டாவது தான் கண்களின் வறட்சி.
வறண்ட கண்கள் ஏற்பட்டால் கண்களில் நசைமன் ஏற்பட்டு நீர் வழிந்துகொண்டே இருக்கும். கார்னியாவில் பாதிப்புகள் உண்டாகும்.
புத்தகம் படிக்கும் போது அல்லது டிவி பார்க்கும் போது, நீங்கள் கண்களை இமைக்க மறந்தால், திரவம் கண்களில் சுரப்பது நின்று போகும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும். கண்களில் கண்ணாடி அணிந்திருந்தாலோ, அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போதும் ஏற்படும் அலர்ஜியாலும் கண்களில் வறட்சி ஏற்படும். மெனோபாஸ் சமயங்களில் உண்டாகும் ஹார்மோன்களில் மாற்றங்களாலும் கண்களில் வறட்சிக்கும் தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post