“பார்”க்குள்ளே நல்லநாடு தமிழ்நாடு!.. மண்டபங்கள் (ம) மைதானங்களில் பார்வசதி செய்துதர திமுகவை அணுகவும்!

பாருக்குள்ளே நல்லநாடு தமிழ்நாடு என்று தேசியக்கவி பாரதியார் எழுதியிருப்பார். அது இப்போது மறுவி திமுக ஆட்சியில் ”பார்”க்குள்ளே நல்லநாடு தமிழ்நாடு என்கிற நிலைமை வந்துவிட்டது. திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் இனி மதுபான விருந்துகள் நடத்தலாம் என்று விடியா திமுக அரசு, அரசு இதழ் வெளியிட்டுள்ளது. இது தாய்மார்களுக்கு அநீதி விளைவிக்கும் விடயமாக பார்க்கப்படுகிறது. திருமணம் போன்ற முக்கிய வீட்டு விஷேசங்களில் அனுமதியோடு மதுகுடிக்கலாம் என்று சொல்வது பிரச்சினைக் குரியதுதான். திருமண நிகழ்வுகளில் மதுப்பிரியர்கள் யாருக்கும் தெரியாமல் மண்டபங்களில் தனியறையில் மது அருந்துவார்கள். இந்த அறிவிப்பு மூலம் இனி வெளிப்படையாக முகம் சுழிக்கும் விதமாக அனைவருக்கும் முன்பும் மது அருந்தும் நடவடிக்கையில் ஈடுப்படவும் வாய்ப்பிருக்கிறது.

இது குடும்பத் தலைவிகளுக்கும், பெண்களுக்கும் தொல்லையைத் தரக்கூடிய ஒன்றாக அமைய வாய்ப்பிருக்கிறது என்று நம்பப்படுகிறது. கருணாநிதி 2015ல் திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக இன்றைய நடவடிக்கை உள்ளது. அதேபோல அன்றைக்கு திமுகவின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலினின் முகநூல் பதிவு ஒன்றை இங்ஙனம் சுட்டலாம். அதில்

இப்படி அதிமுக அரசு மீது எப்போதும் பழிசுமத்தும் ஸ்டாலின், தற்போது ஆட்சிக்கு வந்து மதுவிலக்கு சம்பந்தமாக எந்தமாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றால் ஒன்றுமில்லை என்பதுதான் பதில். திமுகவினரின் சாராய ஆலைகளை வாழவைக்கும் பொருட்டு ஸ்டாலின் இதுபோல செய்கிறாரா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். இதுபோக விளையாட்டு மைதானங்களில் வேறு இந்த மது விருந்திற்கு அனுமதியளித்துள்ளது. போட்டி முடிந்து வீட்டிற்கு போகும்போது இரசிகர்களை காவலர்கள் பிடித்து அபராதம் விதிக்கவும் இது அனுமதிக்கும். அதாவது மது அருந்த வழிவகை செய்வதும் திமுகதான், அருந்தினால் அபராதம் விதிப்பதும் திமுகதான். இது என்ன நியாயம் என்று மக்கள் புலம்புகின்றனர்.

Exit mobile version