திண்டுக்கல் மாவட்டம் பழனியில் குடிநீர் மற்றும் பழங்களை கெடாமல் பாதுகாக்கும் குருமருந்தை சித்தர்கள் முறைப்படி ஜோதிடர் ஒருவர் தயாரித்து வெற்றி கண்டுள்ளார்.
பழனி நேதாஜி நகரை சேர்ந்த ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி, அகத்திய மாமுனிவர் ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குருமருந்து என்பதை தயாரிக்க கடந்த ஒன்பது வருடங்களாக முயற்சி செய்து அதில் வெற்றி கண்டுள்ளார்.
இவர் தயாரித்துள்ள ஒருவகை சுண்ணத்தை தண்ணீரில் கலந்ததால், அந்த நீர் எதிர்ப்பு சக்தி மிக்க நீராக மாறுவதாக அவர் குறிப்பிடுகிறார். கடந்த 4 வருடங்களாக பலருக்கும் வழங்கி பரிசோதனை செய்து அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
தண்ணீர் மட்டுமின்றி, பால், பழங்கள், காய்கறிகளையும் இதைக் கொண்டு கழுவினால், கெட்டுப் போகாது என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். இதன்மூலம் உடலில் ஏற்படும் காயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார்.
Discussion about this post