தமிழகத்தின் நீர்நிலைகளை மேம்படுத்திடும் விதமாக குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
29 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 829 நீர் நிலைகளை 4 மண்டலங்களாக பிரித்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள 277 நீர்நிலைகளை தூர்வார 93 கோடி ரூபாயும், திருச்சி மண்டலத்தில் உள்ள 543 நீர்நிலைகளை புனரமைக்க 109 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல் மதுரை மண்டலத்தில் 681 நீர்நிலைகளை தூர்வார 230 கோடி ரூபாயும், கோவை மண்டலத்தில் 328 நீர்நிலைகளை புனரமைக்க 66 கோடியே 80 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post