கனவு இல்லம் கட்டித் தருவதாக பணம் மோசடி செய்த பிரபல நிறுவனம்!

கனவு இல்லம் கட்டி தருவதாக கோரி உயர்தர மக்களை குறிவைத்து பணம் மோசடி செய்த லோக்கா நிறுவன சந்தோஷ் சர்மா வை கைது செய்து தாங்கள் இழந்த பணத்தைப் பெற்று தருமாறு காவல் ஆணையர் அலுவலகத்தை நாடி உள்ளனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோரிடம் புகார் கொடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பதாகையுடன் நின்று கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தால் 50-க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பின்னர் நான்கு நபர்களை அழைத்து காவல் ஆணையரிடம் அழைத்துச் செல்வதாக கூறினர். இதனை ஏற்க மறுத்த பணத்தை இழந்த பொதுமக்கள் அனைவரும் உள்ளே சென்று காவல் ஆணையரை சந்திக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் பேசி வருகின்றன.

2019லிருந்தே…மோசடி!

கடந்த கொரோனா காலத்தில் 2019 ஆம் ஆண்டு கனவு இல்லம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் மாதவரம் ரவுண்டானா அருகே லோகா எம் என்ற பெயரில் அடுக்குமாடி வீடுகளை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு கொரோனா பெருந்துறை உலகளவில் இருந்ததால் கட்டுமான பணிகளை பாதையை நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பணத்தை கொடுத்தவர்கள் கேட்டபொழுது மூன்று மாதத்தில் பணிகளை தொடங்கி விடுவோம் என ஒவ்வொரு முறையும் இதே கூறி வந்து இருந்த அவர் ஒரு கட்டத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் நேரில் சென்று பார்த்த பொழுது ஒரு சுவர் கூட எழுப்பாத நிலை இருந்தது என பணத்தை முதலீடு செய்தவர்கள் கூறினார். மேலும் கட்டிடத்தை கட்டித் தருவதாக கூறிய 200க்கும் மேற்பட்டவர் அவர்களிடம் இருந்து இதுவரை விற்பனை தொகையிலிருந்து சுமார் 98 சதவீதம் பணம் வசூல் செய்து உள்ளதாகவும் உயர்தர மக்களிடமிருந்து லோகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் சர்மா மற்றும் அவரது வலதுகரமாக செயல்பட்டு வீடு வாங்க வருபவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி வழி நடத்திய அந்நிறுவனத்தில் பல ஊழியர்கள் ஈடுபட்டதாக பணத்தை இழந்தவர்கள் மனக்குமரலுடன் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்நிறுவனத்தில் பலரும் பணத்தை முதலீடு செய்து அரசு பணியில் ஓய்வு பெற்றவர்கள் முதியவர்கள் உள்ளனர் குறிப்பாக மூத்த குடிமகன்கள் சுமார் ஐந்து நபர்கள் மேற்பட்டோர் ஒரு கோடிக்கும் மேலாக வீடு வாங்குவதற்கு சந்தோஷ் சர்மாவிடம் பணத்தை இழந்து தற்போது அதில் நாலு பேர் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்து விட்டதாகவும் இன்னும் சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள் கூடிய விரைவில் அவர்களும் உயிரிழந்து விடுவார்கள் என வேதனையுடன் பணத்தை இழந்தவர்கள் தவித்து வருகின்றனர்.

மோசடி புகார்..! 

மேலும் கனவு இல்லம் வாங்குவதற்காக ஏற்கனவே வசித்து வந்த வீட்டை விட்டு அதில் வந்த பணத்தை நோக்கா நிறுவனத்திடம் முதலீடு செய்து 2019 ஆம் ஆண்டு தாங்கள் 98 சதவீதம் பணத்தை முழுமையாக செலுத்தி விட்டோம் ஆனால் தற்போது அந்த நிறுவனத்தில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருப்பதையும் கண்டறிந்து சந்தோஷமாவிடம் கேட்ட பொழுது எந்த ஒரு பதில் அளிக்காமல் முதலீட்டு செய்தவர்கள்க்கு போக்கு காட்டி வருவதாக பணத்தை இழந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இது தொடர்பாக ஏற்கனவே கொரட்டூர் காவல் நிலையம் DCP அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத சூழலில் தான் இறுதி கட்டமாக தற்போது சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்திப்ராய் ரத்தோரியை சந்தித்து புகார் கொடுக்க இறந்தவர்களை அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர் பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி நான்கு நபர்களை மட்டும் அழைத்து காவல் ஆணையரை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த குடியிருப்பு திட்டத்தில் சந்தோஷ் சர்மாவிடம் இணைந்து தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்குமார்யை நம்பி முதலீடு செய்து உள்ளோம் எனவும் இந்த மோசடி கும்பலில் அவரும் இதில் முக்கிய பங்கு உண்டு என பணத்தை இழந்தவர்கள் தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது என அவர்கள் கூறினர்.

மேலும் தங்களிடம் பெறப்பட்ட தொகையை மற்றொரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் வீடு வாங்கியவர்கள் பெயரில் பதிவு செய்ததை வைத்து எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் மூலம் பணம் பெறப்பட்டு ஏமாற்றி உள்ளார் என்றும் தற்போது அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தகவல் அறிந்தும் நாங்கள் இன்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரை சந்தித்து மீண்டும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வந்துள்ளோம் லோகா நிறுவனர் சந்தோஷ் சர்மாவிடம் விசாரணை நடத்தி தங்களுடன் பணத்தை வாங்கி தருமாறு என குறிப்பிட்டனர்.

Exit mobile version