திமுக அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு கதாநாயகனின் பாவனையைப் பின்பற்றி வந்துள்ளது. குறிப்பாக பொதுமக்களிடம் அந்த பாவனையைச் செய்துகாட்டி மூளைச்சலவை செய்துள்ளது. கதாநாயகன் நல்லவர் என்ற பிம்பம் நாளுக்குநாள் மக்கள் மத்தியில் உடைய ஆரம்பித்துள்ளது. அதற்கு திமுகவே ஒரு காரணம். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி வீசுவதுபோல ஆட்சிசெய்து வருகிறது. அதற்கு மிகபெரிய உதாரணம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ஆகும். இப்படி ஒவ்வொன்றையும் அடுக்கிக்கொண்டே போகலாம். ஈரோடு கிழக்குத் தேர்தல், சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவது, சட்ட ஒழுங்கு, வேங்கை வயலுக்கு இன்று வரை முதல்வர் சென்று ஆய்வு செய்யாதது, சேலம் திமுக நிர்வாகி பட்டியலின இளைஞரை ஆணவக்கொலைகள், பல்வீர்சிங் மீது பச்சாதாபம் காட்டியது, ஊரை அடித்து ஊழல் செய்து முப்பதாயிரம் கோடி சேர்த்தது, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் அருந்த அனுமதி அளித்தது போன்ற எண்ணற்ற செயல்களை சொல்லலாம்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற கூற்றிற்கு இணங்க இந்த திராவக மாடல் அரசு மக்களுக்கு செய்யும் அநீதிகளுக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த வருடத்தின் நான்கு மாதங்களிலே இத்தனை விசயங்களை செய்துள்ளது என்றால் இன்னும் மூன்றாண்டு ஆட்சிகாலத்தில் தமிழகத்தை என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்று மக்களுக்கு பீதி தொடங்கிவிட்டது. திமுக பொதுமக்கள் அரசு அல்ல, தன் மக்கள்(வாரிசு) அரசு என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் பேசியது குறிப்பிடத்தக்கது. நாங்கள் கருணாநிதி குடும்பத்திற்காக உழைப்போம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். நான் கருணாநிதியுடன் இருந்தவன், ஸ்டாலினுடன் இருந்தவன், நாளை உதயநிதியுடன் இருப்பேன், அப்புறம் இன்பநிதியுடனும் இருப்பேன் என்று சொல்வது அடிமை சாசனம் எழுதிவிட்ட கதையைத் தான் நமக்கு சொல்கிறது.
பேரறிஞர் அண்ணா என்கிற பேராளுமை உருவாக்கிய கட்சி இன்றைக்கு குடும்பக் கட்சியாக போய்விட்டது. அவரது எண்ணமும் திண்ணமும் குன்றா நேர்மையும் சிந்திய உழைப்பும் குடும்ப அரசியலால் சிதறுண்டு போய்விட்டது. இதற்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமாக திராவக மாடலை கலைத்து மக்களுக்காக உழைத்து உயர்ந்த எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆட்சி வரும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். புரட்சித் தலைவரின் உழைப்பாலும், புரட்சித் தலைவியின் உறுதியாலும் எழுந்து நின்ற அதிமுக இன்றைக்கு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் அசைக்க முடியாத ஆலமரமாய் உயர்ந்து நிற்கிறது. விடியா அரசை வீட்டிற்கு அனுப்பும் நாள் அருகில்தான் உள்ளது. காத்திருப்போம்!