உங்களிடம் யாராவது காதலை சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்கிறீர்களா? அல்லது நீங்கள் ஆல்ரெடி கமிட்டட் என்று சொல்லவேண்டுமா?உங்களின் காதல் நிலவரத்தை நீங்கள் காதலர் தினத்தன்று அணியும் ஆடையின் மூலமே தெரிவித்துவிடலாம்.ஒவ்வொரு காதல் நிலவரத்திற்கும் ஒவ்வொரு நிறம் உண்டு .அவற்றை நீங்களும் அறிந்து கொண்டு அசத்துங்கள்.
பச்சை – காதலுக்கு நான் ரெடி.
பச்சை நிற உடை அணிந்தால் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார்கள் எனவும், காதலிக்க நான் ரெடியாக இருக்கிறேன் என்பதை உணர்த்துவதே பச்சை நிறம்.
வெள்ளை-பிரதர்..எனக்கு ஆல்ரெடி ஆளு இருக்கு
நான் ஏற்கனவே காதலிக்கிறேன்.நீங்க என்ன காதலிக்காதீர்கள் என்பதை உணர்த்துவதே வெள்ளை நிறம்.
கருப்பு-வட போச்சே……
உங்கள் காதலை யாராவது நிராகரித்து இருந்தால் கருப்பு உடை அணிந்து செல்லுங்கள்.நீங்கள் ஒருவரை காதலித்திருப்பீர்கள், ஆனால் அவர்களுக்கு உங்கள் மீது விருப்பம் இல்லாமல், உங்கள் காதலை நிராகரித்து இருப்பார்கள்.
ரோஸ்-சற்று முன்பு கமிட்டட்
இப்பதான் கொஞ்ச நாள் முன்னாடி லவ் சக்சஸ் ஆனுச்சு..என்ன ட்ரை பண்ணாதிங்க என்று உணர்த்துவதே ரோஸ் நிறம்.
நீலம்- நான் எப்பவோ ரெடி..நீங்க?
என் இதயத்தில் யாருக்கும் இடம் கொடுத்ததில்லை,நான் உங்களை காதலிக்க தயாராக இருக்கிறேன்,நீங்க எப்போது லவ் சொன்னாலும் எனக்கு சம்மதம் என்று நினைப்பவர்கள் நீல நிறம் அணிந்து செல்லுங்கள்.
மஞ்சள்-காதல் தோல்வி
ஏற்கனவே நான் காதலித்து அதில் தோல்வியடைந்து உள்ளேன்.மீண்டும் காயப்பட விரும்பவில்லை என்பதை உணர்த்துவதே மஞ்சள் நிறம்.
சிவப்பு-ஆணியே புடுங்கவேணாம்
சிவப்பு நிறம் அணிந்தால் காதலுக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது என உணர்த்துகிறார்கள்,தயவு செய்து என்ன லவ் பண்ணாதீங்க.உங்க வேலைய பார்த்துட்டு நீங்க போங்க என்று சொல்லாமல் சொல்லுவார்கள்.