தனது பெயரையோ, புகைப்படத்தையோ அரசியல் நிகழ்வுகளில் பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனக்கு எந்த அரசியல் ஆசையும் இல்லை என தெரிவித்துள்ள நடிகர் அஜித் குமார், தனது பெயரையோ, புகைப்படத்தையோ அரசியல் நிகழ்வுகளில் பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தனது திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், வரிசையில் நின்று வாக்களிப்பதே தனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு என்றும் அஜித் குமார் கூறியுள்ளார். தனக்கு தனிப்பட்ட அரசியல் விருப்பு, வெறுப்புகள் இருந்தாலும் அவற்றை மற்றவர்கள் மீது திணிப்பதில்லை என்று விளக்கமளித்துள்ள அஜித், ரசிகர்களிடமும் அதையே எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை முன்னிலையில் அந்தக் கட்சியில் அஜித் ரசிகர்கள் இணைந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், இந்த அறிக்கையை அஜித் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post