அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் – ஜோ பைடன் இடையே, நேரடியான காரசார விவாதம் நடைபெற்றது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் செய்வது வழக்கம். அங்கு நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி, ஒஹியோமாகாணம் கிளைவ் லேண்டில் நடைபெற்றது. இதில் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடைனும் நேருக்கு நேர் விவாதம் செய்தனர்.
விவாதத்தில் நடுவராக இருந்த ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் நெறியாளர் கிறிஸ் வேலஸ் எழுப்பிய கேள்விகளுக்கு, வேட்பாளர்கள் இருவரும் பதில் அளித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன், அதிபர் டெனால்ட் டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லையென்று கூறிய அவர், ”டிரம்ப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாது; சொல்லப்போனால் அவருக்கு எதுவுமே தெரியாது” என்று விமர்சித்தார்.
மேலும், கொரோனா வீரியத்தை முன்பே அறிந்திருந்த அதிபர் டிரம்ப், அது பற்றி நாட்டு மக்களிடம் தெரிவிக்கவில்லையென ஜோ பைடன் குற்றம்சாட்டினார்.
அதிபர் டிரம்ப் பேசுகையில், தான் ஆட்சிக்கு வந்தப் பிறகு அமெரிக்காவில் மருந்துகளின் விலைகளைக் குறைத்துள்ளதாக குறிப்பிட்டார்’.