உடலை பராமரித்துகொள்வதும், அழகை கூட்டுவதற்குமே நாம் அன்றாட வாழ்க்கையில் முயற்சிகள் எடுக்கிறோம் .ஆனால் அனைத்திற்கும் ஆதாரமான கண்களை பராமரிக்க தவறுகிறோம்.மழைக்காலங்களில் காய்ச்சல்,சலி உண்டான பிரச்சனைகள் ஏற்படுவது போல கண்களும் எளிதில் பாதிக்கப்படுகிறது.டியர் ஃபில்ம் எனப்படும் கண்ணின் இயற்கையான கவசமாய் இருக்கக்கூடிய ஒன்றை மழைக்காலம் நீக்கிவிடுகிறது.இதனால் பலவகையான தொற்றுகள் கண்களை தாக்கி கண் எரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகிறது.
மழைக்காலங்களில் கண்களை எப்படி பராமரிக்கலாம் என்பதற்கான டிப்ஸ் இதோ..
1.மழைக்காலத்தில் நாம் மழையில் நனையும் போது,மை போன்ற அலங்கார பொருட்கள் கரைந்து கண்கள் உள்ளே செல்லக்கூடும்.அந்த நேரத்தில் கண்களில் தொற்றுகள் ஏற்படும்.எனவே மழைக்காலத்தில் இது போன்ற அலங்கார பொருட்களை தவிர்ப்பது நல்லது.இல்லையென்றால் water proof கொண்ட அலங்கார பொருட்களை பயன்படுத்தலாம்.
2.உங்களின் கைகளை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.அழுக்கான கைகளை கண்களின் அருகில் எடுத்து செல்லாதீர்கள்.
3.அதே போல் நீங்கள் பயன்படுத்தும் செப்க்சை மழையில் செல்லும் போது, சுத்தம் செய்ய வேண்டும்.கண்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கண் தொற்று ஏற்படும்.
4.’கன்ஜன்க்விட்டிஸ்’ என்பது மழைக்காலங்களில் சாதரணமாக பரவக்கூடிய ஒரு நோயாகும்.இதனால் கண்கள் சிவந்து எரிச்சல் உண்டாகும்.இப்படி ஏற்பட்டால் உடனடியாக கண்களை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.பின்பு ஒரு கண் மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
5.வெளியில் செல்லும் போது நிச்சயம் கருப்பு கண்ணாடி அணிந்து சென்றால் தூசி போன்றவை கண்களின் உள்ளே செல்வதை தடுக்கலாம்..