உலக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருவதனை ஐநாவின் யுனிசெஃப் அமைப்பானது கண்டித்தும் தடுத்தும் வருகிறது. தற்போது கிடைத்திருக்கும் மதிப்பீடுகளின் படி தெற்காசிய நாடுகளில்தான் அதிக அளவிற்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்று கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தெற்காசியாவில் மட்டுமே 290 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது உலக அளவில் 45 சதவீதம் ஆகும். முக்கியமாக இவை எல்லாம் கொரோனா காலக்கட்டத்திலும், அதற்கு பிறகான பொருளாதார பின்னடைவின் காரணமாகவும் அதிக அளவிற்கு நடந்தேறியிருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், பூடான், ஸ்ரீலங்கா, வங்கதேசம், நெபாளம், பூடான், மாலத்தீவு ஆகிய நாடுகள்தான் பிரதானமாக குழந்தைத் திருமணங்களை அதிக அளவில் ஈடுபடுகின்றன என்று சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அளிக்கின்றனர்.
Discussion about this post