EMI வசூலிப்பதில் தளர்வுகளை அறிவித்துவிட்டு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக் கோரிய வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதும் மத்திய அரசின் பணிதான் என தெரிவித்த நீதிபதிகள், வட்டி வசூல் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக் கொள்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post