மாணவர்கள் உயர்படிப்புக்குச் விண்ணப்பிக்கும் போதும், மத்திய, மாநில அரசு வேலைக்கு விண்ணப்பித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போதும் அரசு உயர்பதவியில் இருக்கும் அதிகாரியிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
கையெழுத்து வாங்கும்போது சில அலுவலர்கள் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போதும், மாணவர்கள் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது, கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.