“உலக பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், மின் கட்டண உயர்வை விடியா திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நூற்பாலைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக நூற்பாலை உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு சிறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன், கைத்தறி துறை மாஇச்சர் காந்தி ஆகியோருடன் நேற்றூ பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
இது குறித்து, தமிழக நூற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கூறியது என்னவென்றால்,
உலகப் பொருளாதார மந்தநிலையில், தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, 2022 செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி முதல் மற்றும் இந்த மாதம் ஒன்றாம் தேதியில் உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
நூற்பாலைகள் சுய பயன்பாட்டிற்கு காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. வழக்கம் போல் 20 ஆண்டுகள் முடிந்த காற்றலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
நூற்பாலைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்ய அரசு குழு அமைத்துள்ளது. தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், அக்குழுவின் நடவடிக்கை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டன.