ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள கும்கியானைகளை காண வரும் பொதுமக்கள் அவற்றின் அருகில் செல்ல வேண்டாமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓசூர் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை பிடிக்க மாரியப்பன், பரணி என்கிற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றை காண வரும் பொதுமக்கள், ஆபத்தை உணராமல் அவற்றின் அருகில் செல்கின்றனர். கும்கி யானைகள் பாகன்களுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடக்க கூடியவை. ஒன்றும் செய்யாது என நினைத்து பார்வையாளர்கள் கும்கிகளின் அருகில் சென்று அவற்றை கோபப்படுத்தி வருகின்றனர். எனவே, ஆபத்தை உணராமல் அருகில் செல்ல வேண்டாமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Discussion about this post