திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமித்திருந்த குளத்தை அதிகாரிகள் மீட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் தாசன் செட்டிகுளம் அமைந்துள்ளது. இதனை திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜாமணி மற்றும் அவரது தந்தை ஆக்கிரமிப்பு செய்து தன்வசப்படுத்தி விவசாயம் மற்றும் கரும்பு செட் அமைத்து வந்துள்ளனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் அனுப்பிய நோட்டீஸுக்கும் அவர் பதிலளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், போடி வட்டாட்சியர் ஆர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தபோது அவர்களை பணியை செய்யவிடாமல் ராஜாமணி தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் ஆக்கிரமிப்புகளை இடித்து குளத்தை அதிகாரிகள் மீட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட குளம் மீட்கப்பட்டதற்கு கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post