தோல்வி பயம் காரணமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் வாய்க்கு வந்ததை உளறி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
ஒட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து மாப்பிள்ளையூரணி பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துகுடி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க அதிமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு செயல் திட்டங்களை எடுத்துக் கூறினார். ஒட்டப்பிடாரத்தில் திமுக உறுதியாக தோல்வியைத் தழுவும் என்று குறிப்பிட்டார்.
Discussion about this post