மிளிரும் பள்ளித் திட்டம்:
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளை சுகாதாரமான முறையில் வைத்திருப்பதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசின் மூலம் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பள்ளி வளாகத்தை பசுமையாக வைத்திருப்பது, மாணவர்களிடையே சுய சுகாதாரத்தை பேணிசெய்வது, சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை கூறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைப்பது, மறுசுழற்சி பணிகளை மேற்கொள்வது, நெகிழி இல்லாத வளாகத்தை ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்ட அரசுப் பள்ளியை தமிழக அரசு மிளிரும் பள்ளியாக அறிவிக்கும்.
மிளிரும் திட்டத்தின் படிநிலைகள் :
இதற்காக பல்வேறு குழுக்களை தமிழக அரசு அமைத்து பணிகளை மேற்கொண்டது. மாவட்ட அளவிலான குழுக்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், வட்டங்கள் அளவிலான குழுக்களை கோட்டாட்சியர்களின் தலைமையிலும் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் உள்ளாட்சி துறையுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க பணியாற்றும். இதனை தவிர்த்து, பள்ளிகள் அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, ஐந்து மாணவர்கள் கொண்ட உபக்குழுக்கள் உருவாக்கப்படும். இந்த உபக் குழுக்கள், பள்ளிகளில் சுத்தமான குடிநீர் இருப்பதையும், வகுப்பறைகள் தூய்மையாக இருப்பதையும் உறுதிசெய்யும். மேலும் வாரமொருமுறை நடக்கும் பிரார்த்தனை வகுப்புகளில் மாணவர்கள் சுகாதாரம் குறித்த உறுதிமொழியை எடுக்கவும் செய்கிறார்கள்.
“மிளிரும் திட்டத்தில் மிளிராத திமுக”
தற்போது இந்த திட்டம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதற்கு காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை மிளிரும் பள்ளி என இந்த விடியா அரசினர் அறிவித்துள்ளனர். ஆனால், அந்தப் பள்ளி சுகாதாரமற்ற பள்ளி என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது மிளிரும் பள்ளி திட்டத்தை இன்று விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அரசுப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். ஆனால் அந்த திட்டத்திற்கான எந்தத் தகுதியும் இப்பள்ளிக்கு இல்லை என்பது பல தரப்பினரிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பள்ளி வளாகத்தில் கிடக்கும் மாட்டுச்சாணத்தைக் கூட அப்புறப்படுத்தாமல், அதன் மீதௌ சுண்ணாம்பு பவுடரை தூவி உள்ளனர் நகராட்சி ஊழியர்கள். மேலும் பள்ளி முழுவதும் குப்பைகள் எடுக்கப்படாமலும், தேங்கிய மழை நீர் மற்றும் கழிவு நீரை கூட அகற்றப்படாது நிலையில்தான் பள்ளிக்கூடமே உள்ளது. இப்படி சுகாதாரமற்ற நிலையில் உள்ள அப்பளிக்கு ”மிளிரும் பள்ளி” என பெயர் சூட்டியிருப்பது பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாகத் திறனற்றத் தன்மையைக் காட்டுகிறது என்று கல்வியாளர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.