விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஓய்வு பெற்ற காவலர் சங்கத்தில் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும் எனக் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எப்போதும் முதல்வராகும் யோகம் கிடையாது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்தார்.
Discussion about this post