பொள்ளாச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட திமுக ஒன்றிய செயலாளர் 30 லட்ச ரூபாய் கேட்டு பேரம் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…
தமிழகத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆட்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக தரப்பில் போட்டியிட ஈஸ்வரன் என்பவர் முடிவு செய்தார். இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேலை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ஈஸ்வரனிடம், மருதவேலு 30 லட்ச ரூபாய் பேரம் பேசியுள்ளார். இதுகுறித்த ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. கோவை புறநகர் மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு பணம் தர வேண்டும் என ஈஸ்வரனிடம், மருதவேலு பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
இதேபோல் பிற ஊராட்சிகளிலும் திமுக தரப்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களிடம், திமுக நிர்வாகிகளே பேரம் பேசியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post