திண்டுக்கல்லில் ஏற்கனவே பெயர் உள்ள குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின், நாகல் நகர் சந்தை ரோடு பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு வந்த திமுகவினர் 2 வயது குழந்தையை கொடுத்து பெயர் வைக்கும்படி கூறினார். ஆனால் அந்த குழந்தையிடம் உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு சுவாசிகா என சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போனார் உதய நிதி ஸ்டாலின்.
ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியிடம் பெயர் வைக்க கூட்டி வந்தால் பணம் தருவார் என கூறி வயதானவர்களை எல்லாம் அழைத்து வந்திருப்பார்கள். விளம்பரத்திற்காக அலையும் போலி அரசியல்வாதிகளை இப்படி தோலுரித்து காட்டியிருப்பார் படத்தின் இயக்குனர். ஆனால் இங்கே சினிமா காட்சியையே நிஜமாக்கி காட்டிய திமுகவினரை கண்டு பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
Discussion about this post