திண்டிவனத்தில் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் அக்கட்சிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி.சண்முகம் இல்லத்தில் வைத்து, கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சிலிருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன், ஒன்றிய கழக செயலாளர் டி.டி சேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். விடியா திமுகவில் இருந்து விலகிய திமுகவினர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையை ஏற்று, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Discussion about this post