நில அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்த புகாரில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். இவர் மீது, கடந்த செப்டம்பர் மாதம், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை அபகரித்ததாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தாமஸ் ஆல்வா எடிசன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.
அதேபோல், நாகையை அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர், தனது தந்தை ராஜமாணிகத்தின் 39 அரை சென்ட் நிலத்தை, எடிசன் போலியாக ஆவணம் தயாரித்து அபகரித்துள்ளதாகவும், இட அபகரிப்பு தொடர்பாக புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும், கடந்த 11- ம் தேதி புகார் அளித்தார். இதனையடுத்து, தாமஸ் ஆல்வா எடிசனை 2-வது முறையாக நில அபகரிப்பு வழக்கில், காவல்துறையினர் கைது செய்தனர்.
Discussion about this post