சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சி விவகாரம் தொடர்பாக கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளோடு, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் என்எல்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது பெயரளவுக்கு ஒரு சில விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று விவசாயிகளை திமுகவினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அமைச்சர் பன்னீர்செல்வம் வழக்கம்போல திமுகவின் முக்கிய நிர்வாகிகளை வைத்துக்கொண்டுதான் எந்த முடிவையும் எடுக்கிறார் என்று வேதனையுடன் தெரிவித்தனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சரை, அரசு அலுவலகம் என்பதையும் மறந்து அவரது ஆதரவாளர்கள், வாழ்க முழக்கமிட்டு துதி பாடினர்.
Discussion about this post