ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் நீர் எடுத்துச் சென்றால், திமுக போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தொழில் நிமித்தமாகவும், மருத்துவம் தொடர்பாகவும் சென்னையில் தங்கியுள்ளனர். 6 மாதங்களுக்கு மேலாக சென்னையில் மழை பொழியாத போதிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கல்குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் நீரை சுத்திகரிக்கும் திட்டம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களுக்கான குடிநீரை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனிடையே ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதி மக்களின் தேவைக்கு போக, மீதமிருக்கும் நீரை சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்து 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தநிலையில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்துச்சென்றால் வேலூர் மாவட்டத்தில் திமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.
Discussion about this post